வலிமை ரிலீஸ்: ட்விட் போட்டு தூக்கிய தயாரிப்பாளர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai ajith - 2026

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கி வரும் ‘வலிமை’ பட டீசர் மற்றும் வெளியீடு குறித்து மாநாடு தயாரிப்பாளர் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார்.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த இரண்டாண்டுகளாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது.

ஆனால் படத்தின் வெளியீடு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்தாண்டு இறுதிக்கும் இப்படம் வெளியாகும் என்கிற தகவல் கோலிவுட்டில் உலா வருகின்றன. இந்நிலையில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்துள்ளவர் சுரேஷ் காமாட்சி

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல தீபாவளியாக வலிமை வர உள்ளது. வலிமை பட டீசரும் விரைவில் வெளிவரவுள்ளது என பதிவிட்டார். மாநாடு படமும் தீபாவளிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரே வலிமை படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அந்த ட்வீட்டை அவரே நீக்கிவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.