கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
பணம் இருப்பதை அறிந்திருந்த திருடன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பணம் இருந்த அறைக்குள் சென்று அங்கு இருந்த பணம், ரூ.67 ஆயிரத்தை எடுத்துக் கொண்டான்.
பின்னர் உடனடியாக அங்கு இருந்த ஒரு வெள்ளை தாளில் பேனாவை எடுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றான்.
அதில், ஷம்சீர், என்னை மன்னித்து விடுங்கள். உங்க வீட்டுல இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. நடக்கக் கூட முடியலைன்னா பாருங்களேன். என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் யாருன்னு இப்போது குறிப்பிட விரும்பலை.
நான் வீட்டுக்குத் திருட வரும்போது ஷாம்னா குளிச்சுட்டு இருந்தாங்க. உங்க அம்மா உள்ள இருந்தாங்க. இந்த லெட்டரை இங்க வச்சிருக்கேன். விரைவில் பணத்தை திரும்பி கொடுத்து விடுகிறேன். ஆனா, அதுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும். எங்க வீட்டுலயும் இது யாருக்கும் தெரியாது. ரொம்ப அவசரத் தேவைக்காக எடுத்திருக்கேன். தயவு செஞ்சு என்னை மன்னித்து விடவும் என்று கூறியுள்ளார்.
இப்படி கடிதம் எழுதப்பட்டதை அடுத்து ஷம்சீருக்கு தெரிந்தவர்கள் தான் இந்த பணத்தை திருடியிருப்பார்கள் என்பதால், சங்கரம் குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.