தடுப்பூசி போட மல்லுக்கட்டிய இளைஞர்! அள்ளிக்கட்டிய நண்பர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Youth
Youth

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கினாலும், தற்போது பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். எனினும் சிலர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை அறியாமல் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் ஊசி போடுவதற்கு பயந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருகின்றனர். இது போன்ற ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் நண்பர்கள் சிலர், தங்கள் நண்பர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.

1.20 நிமிட ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கிறார். மேலும்அவர் மருத்துவ ஊழியர்களின் அருகில் செல்வதைத் தவிர்த்து வருகிறார்.

அவரை சமாதானப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணான பிறகு, அவரது நண்பர்கள் அவரை வலுக்கட்டாயமாக கொண்டு செல்கின்றனர். பின்னர் மருத்துவ ஊழியர்களிடம் அந்த நபருக்கு தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அப்போதும் அந்த நபர், தடுப்பூசி போட மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர் கீழே விழுந்துவிட, 3 பேர் அவரை பிடித்துக் கொள்ள, மருத்துவ ஊழியர் ஒருவழியாக தடுப்பூசி போடுகிறார்.

இந்த வீடியோவை, அனில் துபே என்ற பத்திரிக்கையாளர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தடுப்பூசியை பெறுவது மட்டுமல்ல மற்றும் ஒருவருக்கு தடுப்பூசி போடுவதும் கடினமான பணி.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற பல வேடிக்கை வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக கிராமங்களில் தடுப்பூசி போட பயந்து, மக்கள் ஓடி, ஒளியும் பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.