உள்ளாட்சி தேர்தல்: ரஜினி சம்பந்தப்படுத்தி வாக்கு சேகரித்தால் நடவடிக்கை: ரஜினி மக்கள் மன்றம்!

அடடே... அப்படியா? சென்னை
rajini 1 - 2026

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

அதாவது நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்பு ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.

rajini - 2026

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்,கொடி, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.