உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Election Commission - 2026

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வார்டு வரையறை பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வார்டு வரையறைப் பணிகள் முடிந்ததும், அது அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதனை அரசு ஏற்றால், அடுத்த மூன்று மாதத்தில் தேர்தல் நடத்த தயார் என்றும் தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி 3 மாதம் கழித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தாக்கல் செய்யவில்லை.  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.