
னது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்து சொல்லத் திரண்டிருந்த தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தீபாவளியன்று வாழ்த்து சொல்வதற்காகவும் வாழ்த்து பெறுவதற்காகவும் ரஜினி ரசிகர்கள், ரஜினியின் வீட்டு முன்பு திரள்வார்கள். இப்போது. கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால், கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்தார். இந்த நிலையில், தீபாவளி அன்று அவரைப் பார்க்கும் ஆவலோடு ரசிகர்கள் பலர் அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்தனர்.
வீட்டுக்குள் இருந்தபடியே கையசைத்து ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களும் பதிலுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இது காலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படங்களை தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்