கவிஞர் சுவாதி
சினத்தைத்தான் ஆற்றச் சொல்லி ஒளவை சொன்னாள்
சிந்தையையும் ஆற்றி நின்றார் என்ன சொல்ல
மனத்தைத்தான் கல்லாக ஆக்கிக் கொண்டார்
மாண்புகளை கருக்கித்தான் வாழ்ந்து சென்றார்
இனத்தைத்தான் இழந்துநின்றான் அன்றும் கூட
இன்னும் ஏன் இறையாண்மை இழிவு தானே
வனத்தைத்தான் அழித்து நீங்கள் தோட்டம் செய்வீர்
வாட்டமுறும் சொந்தம் தான் வளமை எங்கே
படை கொண்டு வந்தனரே பழையகாலம்
பகைகொண்டா பதுங்குதற்கா ஒன்றும் இல்லை
தடையெல்லாம் ஏதுமில்லை கோயில் தன்னில்
தாழ்பாளும் ஒன்றுமில்லை அங்கே அன்றோ
விடையெல்லாம் தெரிந்தேதான் படையெடுப்பும்
வீணேதான் செய்வாரோ வஞ்சின நட்பு
குடைபிடித்து தாங்கியிங்ஜே செல்வம் கவர்ந்து
கோணலாக்கி சென்றாரே நமது வாழ்வை
சூழ்ந்துள்ள வெளிநாட்டு கும்பெனிசாக
சூளுரைப்போம் அணிதிரண்டு வாரீர்.வாரீர்
மூழ்குமுன்னே தடுத்திடுவோம் விரைந்தே வருக
முத்தழிழால் களையெடுப்போம் முடியும் நம்மால்
தாழ்வதற்கோ பிறந்தானோ தமிழன் தானும்
தலைமுறையில் இல்லையடா எனக்கு வீழ்ச்சி
பாழ்பட்டு போயிடவும் விட்டிடுவோமோ
பதர்கள்நீர் பாய்சுருட்டி ஓடிப் போங்கள்
கல்லறைக்குள் ஒடுக்கிடுவோம் கவனம் கொள்வீர்
கயமைகளிம் நிறமறிந்து அழிப்போம் நாங்கள்
கொல்லாமல் கொன்றிடுவோம் அமைதியின் மூச்சால்
குற்றமெலாம்.நிறுத்திடுங்கள் இது கோயிலின் சக்தி
நில்லாமல் ஓடிடுங்கள்.தருணம் இதுவே
நெருப்பாக மாறிடுவோம் இனிமேல் நாங்கள் வெல்லாமல்.விடமாட்ட விதியை எதிர்த்தே
வீணான கனவுவேண்டாம் எம்மை மாய்க்க
ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்
நம்பிக்கை எம்சொத்து விற்கமாட்டோம்
வானத்தின் ஒளிவந்து எம்மைக் காக்கும்
வன்மத்தின் வாலைக்கூட வெட்டி வீழ்த்தும்
சீனத்தின் வம்பெல்லாம்.செல்லாக்காசு
சிறுபிள்ளைத் தனமன்றோ அவரின் போக்கு
கூனத்தின் மனம் கொண்ட குற்றம் அவரே
குவலயத்தின் பிச்சைதான் அவரின் வாழ்வு-
- எஸ்.சுவாதி M.Com. M.A. M.Phil., புதுக்கோட்டை