படபடத்தப் பட்டாசு.. பட்டுனு காதை மூடிய சிறுமி! யாரு காதனு தெரியுமா? வைரல்!

Published:

girl - 2026

சீனப் புத்தாண்டு கோலாகலமாக பிப்ரவரி 1ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.

பலரும் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுமி ஒருவர் பட்டாசு சத்தத்திற்கு பயந்து போன நாயை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிக்டாக்கில் வைரலான இந்த வீடியோ தென்கிழக்கு சீன மாகாணமான ஜியாங்க்ஸியில் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த குழந்தையின் இத்தகைய செயலால் மிகவும் நெகிழ்ந்து போன நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img