
தீபோஸ்ஸவத் திருவிழாவான தீபாவளி தினத்தன்று இந்த ஆண்டு 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கிக் காட்டப்படவுள்ளது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
10-12 நிமிடங்களுக்கு இந்த ஆளில்லா விமான ட்ரோன் ஷோ வானில் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 1,824 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வானில் டோக்கியோ ஓலிம்பிக் எம்ப்ளெம் காட்டப்பட்டது போல் இந்த முறை அயோத்தியில் 500 ட்ரோன்கள் மூலம் ராமர் கதை வானில் நிகழ்த்தப்படுகிறது.
பகவான் ராமர் அயோத்திக்குத் திரும்பிய கதை ராமாயணக்கதை ஆகியவற்றை அனிமேஷன் மற்றும் ஸ்டிமுலேஷன் டெக்னிக் மூலம் வானில் ட்ரோன்கள் வழியாக நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.

இதற்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் குவாட்காப்டர்கள் அல்லது மல்ட்டி ரோட்டார்கள், இதன் அமைப்பிலேயே எல்.இ.டி வசதி இருக்கும், இந்த ட்ரோன்கள் 400 மீ உயரம் வரை பறக்கும், விநாடிக்கு 12 மீ வேகத்தில் பறக்கக் கூடிய ட்ரோன்கள் இவை. அதிதுல்லிய ஜிபிஎஸ் கொண்டது.
இந்த கோலாகல ட்ரோன்கள் வானில் அற்புதங்க்ளை நிகழ்த்திக் காட்ட டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்குகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோச்செல்லா, சூப்பர் பவுல் ட்ரோன் ஷோக்களில் கலக்கிய இண்டெல் தான் இந்த ராமாயண ட்ரோன் ஷோவையும் தீபாவளியன்று அயோத்தியில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 ட்ரோன் ஷோவுக்கு இண்டெல் வசூல் செய்யும் கட்டணம் ரூ.3 லட்சம் டாலர்களாகும். அதாவது ரூ.1.8 கோடி. உத்தரப் பிரதேச அரசு இதற்காக டெண்டர்கள் விட்டுள்ளது.
வான் ட்ரோன் ஷோ அனைத்தும் சேர்ந்து 35 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.