
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி ஏ73 சாதனம் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட முதல் ஏ சீரிஸ் மாடலாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். சமீபத்தில் இந்நிறுவனம் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது ஜெர்மனியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவலையும்
வெளியிடவில்லை அந்நிறுவனம்.
ஆனால் கருப்பு, வெள்ளை, மற்றும் நீல நிறங்களில் இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஒன்யூஐ 3.1 கஸ்டம் ஸ்கின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களை இடம்பெற்றுள்ளது.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை
சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த கேமிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த பேட்டரி வசதி, அசலத்தலான வடிவமைப்பு என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.