அதிர்ச்சி தகவல்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கோவிட் வாய்ஸ்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
mouth
mouth

கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு என பல்வேறு நோய்களை மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது குரல் இழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆனால் இது கொரோனா விளைவு இல்லை, குரல்வளையில் கிருமி தொற்று ஏற்பட்டு பேச்சிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த குரல் இழப்பு தற்காலிகமானது என்றும், 15 நாட்கள் அல்லது 3 வாரங்களில் குரல் மீண்டும் சரியாகி விடுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3ஆம் வாரத்தில் இது ஏற்படலாம். 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்புள்ளது. இது நிரந்தரமாக குரலை காலி செய்யாவிட்டாலும், திடீரென குரலை இழக்கும் போது அதனால் ஏற்படும் மனக்கவலை பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கு ‘கோவிட் வாய்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அல்லாமல் நோய்த்தொற்றுக்கு பிறகான நீண்ட கால களைப்பு அறிகுறிகளினாலும் குரல் போக வாய்ப்பிருக்கிறது.

பொதுவான கடும் களைப்பு ஆற்றலிழப்பு ஆகியவையும் குரல்வளையைப் பாதிப்பதால் குரலிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.