December 6, 2025, 6:50 AM
23.8 C
Chennai

அட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும்? ஆசிரியர் பண்ற வேலையா இது..?

Sandals
Sandals

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர்களுக்கான ரீட் தேர்வு நடைபெற்றது. REET என்பது (Rajasthan Eligibility Exam for Teachers) அரசுப்பணி ஆசிரியர்களாக பணிப்புரிவதற்கு ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வு.

அரசுப் பள்ளிகளில் 31,000 பணியிடங்களுக்கான இந்த தேர்வை 16 லட்சம் பேர், மாநிலம் முழுவதும் சுமார் 4,153 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர்.

அதோடு, தேர்வு எழுத வருவோர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் செய்யாமல் இருக்க பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் மாவட்டத்தில் உள்ள அஜ்மீர் என்ற நபர் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்திக் காப்பியடிக்க முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.

Shoe bluetooth
Shoe bluetooth

அவரோடு மேலும் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு அறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

தேர்வு எழுத வந்த அஜ்மீர் மற்றும் கூட்டாளிகள் தனது காலணியில் ப்ளூடூத் கருவியினை பொருத்தி உள்ளனர்.

அதோடு அவர்களின் காதுகளில் மிக சிறிய ஒரு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டால், மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருந்த நிலையில், அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D என்றெல்லாம் கூறியுள்ளனர்.

இந்த ப்ளூடூத் செருப்பு விலை ரூ. 6 லட்சம் ரூபாய் எனவும், இதை 25 பேர் வாங்கியுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சாதனத்தை விற்பனை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைகேடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ், ‘ப்ளூடூத் செருப்பு மூலம் முறைகேடு செய்த நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேர்வு அறைக்கு வெளியில் இருந்து யாரோ உதவியதாகவும் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறைகேடுக்கு பிறகு ரீட் இரண்டாம் கட்ட தேர்வில் தேர்வர்கள் செருப்பு அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories