செல்போனில் பேசிய படியே ட்ரைனேஜில் கைக்குழந்தையோடு விழுந்த பெண்!

இந்தியா சற்றுமுன்
lady
lady

சாக்கடைக் குழிக்குள் கைக்குழந்தையுடன் விழுந்த பெண்ணை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து வந்த பெண் அங்கிருந்த குழியை கவனிக்காமல் குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார்.

குழியின் முன்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் செல்போன் பேசும் கவனத்தில் அந்த பெண் அதை சுத்தமாக கவனிக்கவில்லை. பின்னர் குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர் .

Sewer pit
Sewer pit

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பெண்கள் அதுவும் தாய்மார்கள் கைக்குழந்தையுடன் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது மக்கள் அனைவரும் ரோட்டில் செல்லும் போது வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டே செல்கின்றனர், இதனால் பல விபரீதங்கள் நடைபெறுகின்றது, மக்கள் சிறிது முன் ஜாக்கிரதையாக செயல்படவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.