கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் இயக்குநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல இளம் இயக்குநர் நவீன்(36). குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் அவைகள் மக்களிடமும் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் அவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதனால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குநர் நவீனின் உடல் அவரின் சொந்த ஊரான மாண்டியாவில் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் கன்னட திரையலகில் இது மூன்றாவது மரணம் ஆகும்.
முன்னதாக பிரபல போஸ்டர் வடிவமைப்பாளரும், இயக்குநருமான மஸ்தான், நடிகரும், தயாரிப்பாளருமான டிஎஸ் மஞ்சுநாத் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.