புதிய ஸ்டிக்கர்களுடன் வாட்ஸ்அப் பேமேண்ட்!

அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
whatsapp Stricker
whatsapp Stricker

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் போது அதனை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளனர்.

பியார் அவுர் பேமெண்ட்ஸ்’, ‘பே ஓகே ப்ளீஸ்’, ‘பே ஆதா அல்லது ஜியாடா’ போன்ற பணப் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு மொழிகளில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடலின் போது, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

மிக எளிதாக நம்முடைய கருத்துக்களை ஸ்டிக்கர்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம் UPI மூலமாக பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது.

sticker
sticker

இந்த நிலையில் நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற பணத்தை பற்றி ஸ்டிக்கர் மூலம் வெளிப்படுத்தும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

புகழ்பெற்ற ஐந்து இந்திய பெண் கலைஞர்கள் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்களுடன் இணைந்து இந்த புதிய ‘வாட்ஸ்அப் பேமெண்ட்’ ஸ்டிக்கர்களை இந்தியாவில் தனது யூசர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கையொப்பம் இடுவதை போன்ற வடிவங்களுடன் வரும் இந்த ஸ்டிக்கர்கள் மக்களின் கதைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் ஸ்டிக்கர் ‘பியார் அவுர் பேமெண்ட்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஓவியக் கலைஞரான அஞ்சலி மேத்தாவால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘பே ஓகே ப்ளீஸ்’ என்ற இரண்டாவது ஸ்டிக்கர் ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஜிஃப் கியூரேட்டரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஸ்டிக்கர் ‘பே ஆத அல்லது ஜியாடா’ என்று அழைக்கப்படுகிறது. சுவர் ஓவியரான நீதி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

payment Stricker
payment Stricker

நான்காவது ஸ்டிக்கர் ‘சப்ஸே பட ரூபையா’ ஆகும். விளக்கப்பட கலைஞரான ஓஷீன் சில்வா இதனை வடிவமைத்துள்ளார். ஐந்தாவது ஸ்டிக்கர் ‘அப்னா சப்னா பணம்’ ஸ்டிக்கரை மும்பையைச் சேர்ந்த கிராஃபிக் டிசைனர் மீரா ஃபெலிசியா மல்ஹோத்ரா என்பவர் வடிவமைத்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதற்கு ஸ்டிக்கர்களை எவ்வாறு சேர்ப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு:
நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் சாட்டினை திறக்க வேண்டும். பிறகு பேமண்ட் ( Payment ) என்ற ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.நீங்கள் அனுப்ப வேண்டிய தொகையை அதில் பதிவிடவும். எமோஜி ஐகானைத் க்ளிக் செய்ய வேண்டும். அதில் ஏதாவது ஒரு ஸ்டிக்கரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து ( Next ) என்பதனை க்ளிக் செய்து, UPI ரகசிய எண்ணை பதிவிட்டு பணம் அனுப்ப வேண்டும்.

ஐபோனில் :
ஆண்ட்ராய்டினை போலவே ஐபோனிலும் அதே முறைதான். நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் சாட்டினை திறந்து, பேமண்ட் ஐகானை தேர்ந்தெடுத்து அதில் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட வேண்டும்.

பிறகு எமோஜி ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கு தேவையான ஸ்டிக்கரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் UPI எண்ணை பதிவிட்டு பணம் அனுப்ப வேண்டும். நீங்கள் பணம் அனுப்பிய நபருக்கு ஸ்டிக்கருடன் நீங்கள் அனுப்பிய தொகையைக் காட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.