
சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு (King Cobra) தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி.
வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் அதே வேளையில் சிலர் அந்த நபருக்கு பையத்தியம் பிடித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். வீடியோவில் பாம்பு எவ்வளவு பயங்கரமாக தோன்றுகிறது என்பதை பார்க்கலாம். எனினும், தண்ணீர் குடிக்கும் போது, அந்த நபரை எந்த விதத்திலும் தாக்கவில்லை என்பதும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.
பாம்பின் இந்த சுவாரஸ்யமான வீடியோ royal_pythons_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பயனர் வீடியோவை பகிர்ந்து கொண்டு, ‘இது ஒரு அற்புதமான காட்சி. தாகத்தில் தவித்த கரு நாகப்பாம்பு தண்ணீர் குடிக்கிறது’ என்று 6 நாட்களுக்கு முன்பு பதிவேற்றிய இந்த வீடியோ 1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை (Viral Video) மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
தண்ணீரை கொடுக்கும் நபர் கையுறையை அணிந்திருந்தாலும், இது மிகவும் விஷ நிறைந்த பாம்பு என்பதால், பாம்பு கடித்தால் விஷம் உடலில் பரவுதை கையுறை தடுக்காது என இதற்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் இந்த விஷப்பாம்பு தண்ணீர் குடிக்கும்போது எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது என்று எழுதியுள்ளார். மொத்தத்தில், இந்த வீடியோவை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.