ஆல் லைக் திஸ் தால் கிச்சடி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
dal kithati
dal kithati

தால் கிச்சடி

தேவையானவை:
தோலுடன் உடைத்த பச்சைப்பயறு (வறுத்தது) – ஒரு கப்,
சேமியா – கால் கப்,
பொடியாக நறுக்கிய (விருப்பமான காய்கறிகள்) – கால் கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இத்துடன் பச்சைப்பயறு, சேமியா சேர்த்துக்கிளறி, பயறு, காய்கள் வெந்ததும் இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.