டெலிகிராம் புதிய அப்டேட்.. இனி அசத்தலாம்!

Published:

telegram - 2026

உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் சுமார் 100 கோடிக்கும் மேலானாவர்கள். தங்களது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்க புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது டெலிகிராம்.

அந்த வகையில், தற்போது புதிய விஸ்வல் மற்றும், டெலிகிராம் செயல்பாடுகளில் புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

டெலிகிராம் 8.0 வர்சனில், ஐ.ஒ.எஸ். பயனாளர்களுக்கு புதிய டவுண்டோடு மேனஜர் ஆப்சனை மெனு பாரின் கீழ் டிஸ்ப்ளே ஆகும்படி வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஃபைல்ஸ் மற்றும் ஃபோட்டோக்களை டவுன்லோடு செய்வதில் முதன்மையை தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒன்றிருக்கு மேற்பட்ட ஃபோட்டோக்களை தேர்வு செய்து அதை பகிர்வதற்கான புது வசதி கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டெலிகிராம் செயலி சற்று டிரான்ஸ்பரண்ட் டிசைனையும் வழங்குகிறது. இந்த அம்சத்தின் மூலம் டெலிகிராம் பயனர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும்.

நாம் பிறருக்கு போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம். தற்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

ஆண்ராய்ட் பயனாளர்கள் செமி- ட்ரான்ஸ்ப்ரண்ட்(semi-transparent interface) இண்டஃபேஸ் வசதியை பெறுகிறார்கள். மேலும், ஆண்ட்ட்ராய் மற்றும் மாக், ஐ.ஒ.எஸ். ஆகியவற்றில் டெலிகிராம் லாகின் செய்யும்போது புதிய அனிமேசன் வகையிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆப்கள் ஆப்சன் மூலம், டெலிகிராம் குழு ப்ராட்காஸ்டிங் லைவில் அவர்களும் இணையலாம். இதில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு ஒ.பி.எஸ். ஸ்டூடியோ மற்றும் எக்ஸ்.ஸ்ப்ளிட் ப்ராட்காஸ்டர் (OBS Studio and XSplit Broadcaster.) ஆகியவைகள் மூலம் இணைந்து கொள்ளும் திறனை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகிராம் பயனாளர்கள் தங்களது யூசர்நேம் உடன் t.me என்ற லிங்கை பகிந்துவிட்டால், அவர்கள் லைவ் ப்ராட்காஸ்டில் இணைந்து கொள்ளலாம்.

ஏற்கனவே புதிய அப்டேட்களில், லைவ் ஸ்ட்ரீம் அம்சம் எண்ணிக்கையற்ற பார்வையாளர்களை அனுமதிக்கும், தங்கள் கையை உயர்த்தி ஒளிபரப்புகளில் சேர வேண்டும், ஃபார்வேர்டு மெஜ்சேஜில் பயனர்கள் அனுப்புநரின் பெயரை மறைப்பது, ஃபோட்டோ அல்லது மீடியா செய்திகளில் தலைப்புகளை மறைப்பது, தாங்கள் அனுப்ப விரும்பாத செய்திகளைத் தேர்வு செய்து நீக்கலாம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

டெலிகிராம் குழுப் வீடியோ அழைப்புகள் 1,000 பார்வையாளர்கள் வரை அனுமதி, வீடியோக்களை 0.5x அல்லது 2x வேகத்தில் பார்க்கலாம் போன்ற அப்டேட்களை வழங்கியுள்ளது.

சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.

Related articles

Recent articles

spot_img