திருச்செந்தூர்: உண்டியல் காணிக்கை இந்த மாதம் ரூ.2.88 கோடி!

அடடே... அப்படியா? ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
07 07Nov Dhin  Thiruchandur
07 07Nov Dhin Thiruchandur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் இரண்டு முறை எண்ணப்படுகிறது.

டிசம்பர் மாத உண்டியல் எண்ணிக்கையானது கடந்த 7-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர். கடந்த 7-ந் தேதி எண்ணும் போது ரூ.1 கோடியே 39 லட்சத்து 32 ஆயிரத்து 926 கிடைத்தது.

அதேபோல் 21-ந் தேதி எண்ணும் போது ரூ.1 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரத்து 387 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 88 லட்சத்து 6 ஆயிரத்து 313 கிடைத்துள்ளது.

அதேபோல், இந்த மாதம் மொத்தத்தில் 2 ஆயிரத்து 36 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 200 கிராம் வெள்ளியும், 73 வெளிநாட்டு நோட்டுகளும் கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.