தப்ளிக் ஜமாத் என்பது இஸ்லாமிய மதப் பிரச்சார அமைப்பு மட்டுமே என்று யாராவது மூளைச்சலவை செய்திருந்தார்கள் என்றால் … மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள் … காந்தஹார் விமானக் கடத்தல் முதல் பல தீவிர/பயங்கரவாதச் செயல்களுக்கு பின்னணியில் தப்ளிக் ஜமாத் அமைப்பின் தொடர்பு இருந்துள்ளது …
சாமானியனுக்கு தெரியும் விடயங்கள் இந்திய அரசின் உளவுத்துறைக்கு தெரியாமல் போனது வினோதமே!
தப்லிகி ஜமாத் உறுப்பினர்களில் ஒரு பிரிவினர், காவல் துறையினரையும், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வந்த மற்ற அதிகாரிகளையும் அவர்கள் தங்கியுள்ள அலாமி மார்கஜுக்குள் அனுமதிக்க மறுத்தனர். கதவைப் பூட்டிக் கொண்டனர். நள்ளிரவில் மோதல் தவிர்க்க இயலாததாக ஆகிவிடும் சூழல் ஏற்பட்டது என்று ஓர் உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
விவரம் அறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலை அங்கு சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஐந்தாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுடன், அதிகாலை 1:30 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றார் அஜித் தோவல்.
அங்கிருந்த மதத் தலைவர்களிடம் அவர்கள் நாட்டின் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் எனத் திட்ட வட்டமாகக் கூறினார் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். வைரஸ் மதம் பார்த்துத் தாக்குவதில்லை என்றும் அவர்கள் தங்களது நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மருத்துவச் சோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொன்னார்.
அயல்நாட்டிலிருந்து வந்திருந்த உறுப்பினர்களிடமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சொன்னார்.
தப்லிகி உறுப்பினர்கள் அதிகாலையில் தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். பின் மருத்துவமனைக்கும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள மையங்களுக்கும் இணங்கினார்கள். எல்லோரையும் இடம் மாற்ற காவல்துறைக்கு 100 மணி நேரமானது!
அடுத்த இரு தினங்களில் அரசின் உத்தரவை மீறியதற்காக, தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதன் பின்னர் மௌலானா சாத் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.
இதை அடுத்து, உபி.மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள மௌலானா சாத்தின் சொந்த ஊருக்கு போலீசார் விரைந்தனர். இது குறித்து ஜமாத் செய்தி தொடர்பாளர் கூறிய போது, மௌலானா சாத்தை நான் சந்தித்து ஒருவாரம் ஆகிறது. அவருடன் நான் பேசவுமில்லை, தொடர்பிலும் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமறைவாகி தேடப்பட்டு வரும் நிலையில், மௌலானா சாத் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த ஆடியோவில் மௌலானா கூறியுள்ளதாவது:
டாக்டர்கள் அறிவுறுத்தியபடி நான் தில்லியில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். ஜமாத்தை சேர்ந்த அனைவரும் நாட்டில் எங்கிருந்தாலும் சட்டத்தின் உத்தரவுகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருங்கள், அரசாங்கத்தின் கட்டளைகளை பின்பற்றுங்கள். எங்கும் கூடியிருக்க வேண்டாம். தொற்றுநோய், மனிதனின் பாவங்களால் ஏற்பட்டுள்ளது என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.