சேவல் போல கூவி லொள்ளு செய்த நாய்!வைரல்!

அடடே... அப்படியா? சற்றுமுன்
Rooster - 2026

விலங்குகளில், நாய்கள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்ததாக கருதப்படுகின்றன. மற்ற உயிரினங்களை விட வேகமாக கற்றுக்கொள்வது அவைகளுக்குத் தெரியும்.

தற்போது நாய்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்ப்டுத்துவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாய் சேவல் கூவுவதை போல் மிமிக்ரி செய்யும் வீடியோவை பல ரசித்துள்ளனர்.

வைரலான வீடியோவில், சாலையில் சேவல் ஒன்று நின்று கூவுதைக் காணலாம். அதன் அருகில் அமர்ந்திருந்த ஒரு நாய் கோழியைக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

சேவல் கூவுவதை நிறுத்தியவுடன், நாய் சேவலை போலவே மிமிக்ரி செய்வது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நாயின் இந்த செயலால் சேவலும் சிறிது கடுப்பாவதைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.