அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புயல்..!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

balachandran - 2026

மத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் இந்தப் புயல் உருவாகும் என்றும், வங்கக் கடல்பகுதியில் தற்போது உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு அளவு குறைவாக இருப்பதால், இந்த மாதம் பெய்யும் மழையைப் பொறுத்தே அடுத்த கோடைக்காலம் மட்டுமல்ல, அடுத்த மாதத்துக்கே சென்னைக்கான குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே புயல் மழையை சென்னை வாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.