lucky - 2026

பால் வாங்க சென்றவர் பணக்காரர் ஆன அதிர்ஷ்டம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
lucky - 2026

அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சொந்தமாக ஒரு பால்பண்ணை தொடங்கும் அளவிற்கு கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.

அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் அன்பு குழந்தைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கினால் என்ன நேற்று மனம் சலனப்பட்டுள்ளது. உடனே காசு கொடுத்து அந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி சீட்டு தான் தற்போது அவரின் வாழ்க்கையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் பரிசுத் தொகை விழுந்திருக்கிறது.

அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே அதிகமான சிறப்புப் பரிசை பெற்றவர் இவர் தான்.

இவ்வளவு தொகை பரிசை வென்ற இரண்டாம் அதிஷ்டசாலியாக டென்னிஸ் உள்ளார். இதில் வெற்றி வாய்ப்பு என்பது 1,632,000-ல் ஒருத்தருக்கு தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.