Thirupathi - 2026

திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் ஆலயங்கள் இந்தியா
Thirupathi - 2026

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக இலவச டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நேரடியாக இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின் தேவஸ்தான முதன்மை தலைமை செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் 15 தேதி வரை மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக மக்களுக்கு இலவச டிக்கெட் நேரடியாக வழங்கலாம் என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

வருகிற 16ஆம் தேதி திருப்பதியில் ஆகாச கங்கை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.

அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் வடிவமைக்கப் படுவதாகவும், மேலும் கோவிலின் சிதலமடைந்த பகுதியை சீரமைக்கப்படும் எனவும் கூறினார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.