
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4-ம் படி செப்பு ஸ்தலத்தார் ஏ.கே.ஏ.அரிகரசுப்பிரமணியன் அய்யர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.