
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
India is poor & underdeveloped country – பாரத தேசம் ஏழ்மையானது. முன்னேற்றமில்லாதது!.
“இந்து மகா சமுத்திரத்தின் அடியில் இருக்கும் சேற்றை எல்லாம் வாரி எடுத்து உம் (பிரிட்டிஷ் கிறிஸ்துவம்) முகம் மீது கொட்டினாலும் நீங்கள் எங்கள் பாரதிய கலாசாரத்தின் மீது பூசிய சேற்றை விட குறைவாகவே இருக்கும்!” என்று முழங்கினார் சுவாமி விவேகானந்தர்.
வந்தேறி கிறிஸ்துவ பிரிட்டிஷார் நம் கலாசாரத்தின் மீது சுமத்திய வீண் பழிகள் கொஞ்ச நஞ்சமல்ல! கிறிஸ்துவ மதத்தை பரப்ப விரும்பிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுடைய மானசிக புதல்வர்களும் நம் தேசத்திற்கு பழம்பெரும் காலம் முதல் உள்ள ‘பாரத தேசம்’ என்ற பெயரை மாற்றி ‘இன்டியா’ என்று நாமகரணம் செய்தனர்.
பாரத தேசம் என்றால் – பரதன் நினைவுக்கு வருவான்.
பாரத தேசம் என்றால் – யக்ய பூமி நினைவுக்கு வரும்.
பாரத தேசம் என்றால் – ரிஷிகளின் தேசம் என்பது நினைவுக்கு வரும்.
ராமன், கிருஷ்ணன், ஹரிச்சந்திரன், குப்தர்கள், பொற்காலங்கள், ஸ்ரீகிருஷ்ணதேவராயர் எல்லோரும் நினைவுக்கு வருவார்கள். ஆனால் இந்தியா என்றால் ஆங்கிலேயர்கள் நம்மைப் பீடித்த காலம் நினைவுக்கு வரும்.
இரத்தினங்களைத் தன் வயிற்றில் நிறைத்திருந்த (ரத்னகர்பம்) பாரத தேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செல்வம் நிறைந்த தேசமாக பெயர் பெற்றிருந்தது. அப்போதிருந்த அனைத்து தேசங்களோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. சுகந்த திரவியங்கள், பருத்தி நூல், பட்டுத் துணிகள், தங்கம், வெள்ளி ஆபரணங்களை ஏற்றுமதி செய்யும் தேசமாக புகழ் ஓங்கியிருந்தது.
அரசியல் காரணங்களால் பாரத தேசம் உறிஞ்சப்பட்டது. இன்னமும் உறிஞ்சப்படுகிறது. இன்றுவரை பாரததேசத்தில் இருக்குமளவு தங்கம் உலகில் வேறு எந்த தேசத்திலும் இல்லை எனலாம். பாரதமாதா பொன் விளையும் பூமி. கர்ம பூமி. வேத பூமி. அப்படிப்பட்ட வைபவம் நிறைந்த வரலாற்றோடு கூடிய பாரத தேசத்தை இந்தியாவாக, ஏழை நாடாக பிரிடிஷார் பிரச்சாரம் செய்தார்கள்.

பாம்புகளைப் பிடித்துவந்து விளையாட்டு காட்டுவதைத் தவிர வேறு துவும் தெரியாத அநாகரிகமானவர்கள் என்றும் பிள்ளை பிடிப்பவர்கள் என்றும் ரதச் சக்கரத்தில் மனிதர்களை பலி கொடுக்கும் தேசம் என்றும் பிரச்சாரம் செய்தார்கள். இன்னமுன் செய்கிறார்கள். உலகிற்கே நாகரிகம் கற்றுத் தந்த நம் தேசத்தை அநாகரிகம் என்று துஷ்பிரசாரம் செய்தார்கள்.
‘சோனேகி சிடியா’ (தங்கப் பறவை) என்று புகழ் பெற்றிருந்ததும் அங்காடிகளில் ரத்தினங்களை விற்பனை செய்ததுமான நம் தேசம் பரம ஏழை நாடாக ஏன் ஆனது? சுவர்ண யுகமாக பெயர் பெற்ற காலம் போய் பிச்சை எடுக்கும் காலம் ஏன் வந்தது? விஸ்வ குருவாக உலகிற்கு வழிகாட்டிய நம் தேசம் அநாகரிகமானதா? மொத்தப் பிரபஞ்ச வருமானத்தில் 24 சதவிகிதம் உள்ள தேசம் எப்போது ஏழையானது? கிறிஸ்தவர்கள் தம் மதமாற்றப் பிரசாரத்திற்காகச் செய்த குள்ளநரித் தந்திரங்கள் இவை.
கிறிஸ்தவ சங்கங்கள் வெள்ளையர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டு இந்தியாவில் மத மாற்றத்தில் ஈடுபட்டார்கள். தாம் ஏழையாக மாற்றியவர்களுக்கு பிச்சை போட்டு மதம் மாற்றி அரசாங்கத்திற்கு உதவும் ஒரு அங்கமாக சர்ச்சுகளை நிலைநாட்டிக் கொண்டார்கள்.
அசத்தியமாக ஜித்துவிளையாட்டு மூலம் சினிமாக்களில் இந்தியர்களை பரம எழைகளாகக் காட்டி சந்தா வசூல் செய்து கிறிஸ்தவர்களாக மாற்றும் சர்ச் வியாபாரத்தை வளர்த்துக் கொண்டார்கள். ‘சேவை செய்கிறோம்’ என்ற முகமூடியில் மதம் மாற்றும் தொற்று வியாதிகளாக பலரை உருவாக்கினார்கள்.
லோக்சபா ஸ்பீக்கர் ஸ்ரீமதி சுமித்ராமஹாஜன் அண்மையில் லண்டனில் ஒரு மியூசியத்தைப் பார்ப்பதற்கு சென்ற போது நடந்த அனுபவத்தை ஒரு மாநாட்டில் கூறினார். அங்கு பொருட்காட்சியில் இருந்த கோஹினூர் வைரத்தைச் சற்று அருகில் சென்று அவர் பார்த்த போது அங்கிருந்த செக்யூரிட்டி அதிகாரி தடுத்தாராம். அதற்கு அவர் வருத்தமடைந்து, “இது எங்களுடையது, தெரியுமா? நான் பாரத தேசத்திலிருந்து வருகிறேன்!” என்றாராம்.
“தெரியும். உங்களால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் அது எங்களுடையதாகியது!” என்றாராம் அந்த அதிகாரி.
பல்வேறு நாடுகளில் இருந்து கொள்ளையடித்து வந்த பல ஆபரணங்கள், மயில் சிம்மாசனம் போன்ற அரிதான பொருட்கள், சிற்பங்கள், வாட்கள், கலைப் பொருட்கள்… அந்த பொருட்காட்சியில் வைத்திருந்தார்கள். இணையத்தில் கூட இவற்றின் படங்களைப் பார்க்க முடியும். அன்றைய அகண்ட பாரத தேசத்திலிருந்து கொள்ளையடித்துக் கொண்டு சென்ற செல்வங்களைப் பார்க்கும் போது தேச பக்தர்கள் யாருக்காயினும் நெஞ்சு பதைபதைக்காமல் இருக்காது.
பஞ்சலோகத்தில் செய்த பல விக்ரகங்கள், தெய்வீகச் சிலைகள், பஞ்சமுக கணபதி, கணக்கற்ற பௌத்த விக்ரகங்கள் எல்லாம் எல்லை தாண்டி கடத்தப்பட்டன.
இவை தவிர 1947 க்குப் பிறகு கோவில்களில் கொள்ளையர் புகுந்து திருடிச்சென்ற சுமார் 22000 விக்ரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன.
பாரதத்தில் பயணம் செய்த சீன யாத்ரீகர் பாஹியான் போன்றவர்கள் நம் தேச வைபவத்தைப் புகழ்ந்துள்ளனர். “பிச்சைக்காரர்களோ திருடர்களோ பாரத தேசத்தில் இல்லை” என்று வியந்து பாராட்டினர்.
துருக்கர்கள் மத மூடநம்பிக்கையால் கோவில்களை துவம்சம் செய்து செல்வங்களை வாரிச் சென்றனர். ஆங்கிலேயர்கள் செய்த தீவிரமான கொள்ளையால் பாரத தேசத்தின் ஜிடிபி கிபி ஒன்றாம் ஆண்டில் இருந்த 32 சதவிகிதத்திலிருந்தது 1950ல் நான்கு சதவிகிதமாக இறங்கியது. 1700 ஆண்டுகள் உலகில் சூப்பர் பவராக இருந்த நம் தேசத்திற்கு ‘புவர்’ என்று நாமம் சூட்டினர் வந்தேறிகள்.
இவ்விதமான துஷ்பிரசாரங்களால் நாம் உண்மையிலேயே ஏழை தேசத்தவர் என்ற தாழ்வு மனப்பான்மை மக்களிடம் பெருகியது. உலக நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லும் மனப்பான்மை நம் தலைவர்களுக்கு ஏற்படுவதற்குக் காரணம் இதுவே. இந்த மனப்பான்மையால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சாமர்த்தியம் மிக்க சமுதாயத்தை அழித்தோம்.
வழிமுறைகளில் இருந்த குறைபாடுகளால் அபிவிருத்தி விகிதம் எப்போதுமே 3.5க்கு அதிகமாகவில்லை. நம் தேசத்தின் இந்த வளர்ச்சி விகிதத்தை ‘சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்து க்ரோத் ரேட்’ என்று ஏளனர் செய்தனர்.
இவ்வித பொய்ப் பிரசாரங்கள் மக்களின் மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தின. அதனால்தானோ என்னவோ நம் மக்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் மீது மோகம் அதிகரித்தது. ஆனால்…
ப்ரோடான் பரிசோதனைகள், ராக்கெட் பிரயோகங்கள்… ஆகியவற்றின் காரணமாக பாரத மக்களின் சிறப்பு வெளிநாட்டாருக்குப் புரிந்தது. சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பு, விண்வெளிச் சோதனைகள், அடிப்படை வசதிகளின் கட்டமைப்பு போன்றவற்றால் நிகழ்காலத்தில் நம் தேசத்தின் மீது உலக நாட்டு மக்களின் அபிப்பிராயம் நேர்மறையாக வளர்ந்துள்ளது.
உலகப் போரில் அடிவாங்கிய ஜெர்மனி திரும்பவும் மீண்டெழுந்தது. 1965ல் ஸ்ரீஅடல்பிகாரி வாஜ்பாயி ஜெர்மன் தேச நண்பர் ஒருவரை சந்தித்தபோது அந்நாட்டு நிலைமை பற்றிக் கேட்டார். அதற்கு அந்த நண்பர், “இப்போது வந்து பாருங்கள்! முன்பை விட சிறப்பாக நாட்டை கட்டமைத்துள்ளோம். நாங்கள் மானசீக வலிமை மிக்கவர்கள். உழைப்பே எங்கள் போதை!” என்றாராம். அந்த மானசீக வலிமை நம்மில் பெருக வேண்டும்.
Source : ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், நவம்பர், 2018