Pool Pandi 1 - 2026

43வது தடவையாக ரூ.10000 நிவாரண நிதி வழங்கிய யாசகர் பூல் பாண்டி!

சற்றுமுன் அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் மதுரை
Pool Pandi 1 - 2026

முதல்வர் நிவாரண நிதிக்கு 43வது தடவையாக யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி கொடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டி (72).
யாசகர். இவர் கடந்த கொரோனா காலத்தில், பொதுமக்கள் கஷ்டப்படுவதை உணர்ந்து தான் யாசகம் செய்து சேர்த்த பணத்தை கொரோனா நிதியாக கொடுத்து வந்தார்.

இவர் மதுரை மாவட்டத்தில், கொரோனா காலத்தில், 33 தடவை கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கலெக்டரிடம் நேரில் வழங்கினார்.

Pool Pandi - 2026

அதனைத்தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் வீதம், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கினார். அவர் நேற்று 43வது தடவையாக ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வங்கியில் பணத்தை செலுத்தி, அதற்கான ரசீதை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.

இதன் மூலம் கொரோனா நிவாரணம் மற்றும் முதல்வர் நிவாரண நிதியாக ரூ.4.30 லட்சம் வழங்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.