அமித் ஷா சென்னை வருகை ரத்து! பியூஷ் கோயல் வருகிறார்!

சற்றுமுன்

amit sha - 2026

சென்னை: தமிழகத்தில் பாஜக., அதிமுக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் களை கட்டியுள்ள நிலையில், பாஜக., தலைவர் அமித்ஷாவின் சென்னை, வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. அவர், மும்பையில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக., பாஜக., இடையே பல கட்டமாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. முன்னதாக, தமிழக பாஜக., தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் கடந்த 14ஆம் தேதி இரவு சென்னை வந்து தமிழக அமைச்சர்களிடம் கூட்டணி குறித்து வெகு நேரம் பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. ஆயினும், கூட்டணி குறித்த அறிவிப்பை, பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா முறைப்படி அறிவிப்பார் என்று கூறப் பட்டது.

நேற்று மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியுடனான கூட்டணி முடிந்ததை அடுத்து, தமிழகத்தில் கூட்டணி குறித்து அறிவிக்க சென்னை வருகிறார் அமித்ஷா என்று கூறபொ பட்டது.

ஆயினும் அதிமுக., தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைவதால், முதல்வர், துணை முதல்வரை ஆகியோர் அதிமுக கூட்டணி குறித்து தகவல் வெளியிடுவார்கள் என்று கூறப் பட்டது.

இந்நிலையில், அமித்ஷாவின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது,. அவர் மும்பையில் இருந்து அவர் தில்லிக்கு புறப்பட்டார். அதே நேரம், பாஜக., தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மீண்டும் சென்னை வருகிறார் என்றும், அவர் அதிமுக., நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.