அதிமுக கூட்டணியில் பாமக! தொகுதிகள் எண்ணிக்கை முடிவானது!

Published:

admk pmk alliance - 2026

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானிக்கப் பட்டது. 7 மக்களவை தொகுதியுடன் 1 மாநிலங்களவையும் பாமக.,வுக்கு ஒதுக்கீடு. அதே நேரம்,

21 தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என்று
துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாஜக, அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில்…மற்ற கட்சிகளின் நிலை குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. பாஜக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இடம்பெறுகிறது. அதிமுக-பாமக பேச்சுவார்த்தை சென்னையில் துவங்கியது

பாமக., நிறுவனர் ராமதாசை சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பாமக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப்  பேச்சுவார்த்தையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் நேரடி சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

தாம் எதற்காகக் கூட்டணி வைத்தோம் என்ற காரணத்தை அன்புமணி விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிப்பார் என்று கூறப் பட்டது.

Related articles

Recent articles

spot_img