இது பாரதமா பாகிஸ்தானா? ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி ஊர்வலத்துக்குக் கூட மறுக்கப்படுவது ஏன்?

உள்ளூர் செய்திகள் நெல்லை

nellai town procession - 2026

இது பாரதமா இல்லை பாகிஸ்தானா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் நெல்லை மாநகர மக்கள்.

நெல்லை டவுன் மேல ரத வீதி வழியாக ஊர்வலம் செல்ல முயன்றபோது, போலீஸார் அதற்கு அனுமதி மறுத்தனர். ஊர்வலம் ஒன்றும் அப்படி மோதல்களைத் தூண்டும் ஊர்வலமல்ல! காஷ்மீரில் பாகிஸ்தான் பின்னணியில் இயங்கும் இசுலாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதியின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த  இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் மௌன ஊர்வலம் தான்!

ஊர்வலம் செல்லும் நெல்லை டவுன் மேல ரத வீதியில் பள்ளிவாசல் இருப்பதால், பள்ளிவாசலின் முன்பாக, மௌன அஞ்சலி ஊர்லவம் செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் கொதிப்படைந்த இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த நெல்லை டவுன் வியாபாரிகள் நல சங்கத்தினர் சாலையிலேயே அமர்ந்து போராடத் தொடங்கினர்.

பள்ளிவாசல் வழியாக ராணுவ வீரர் அஞ்சலி ஊர்வலம் சென்றால் மதப்பிரச்சனை வரும் என்று போலீஸார் கூறியதைக் கேட்டு அதிர்ந்த வியாபாரிகள் திரளாக போராட்டம் நடத்தினர். இது பாரதமா? இல்லை பாகிஸ்தானா? என்ற கேள்வியுடன் வியாபாரிகளின் போராட்டம் போலீஸாரை கண்டித்து நடந்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு என்ன ஆயிற்று என்று கண்டனங்கள் எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.