booth officers - 2026

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்: தேர்தல் ஆணையம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
booth officers - 2026

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும்.

உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வாக்குப்பதிவு அலுவலர்-1-க்கு ரூ.1,550 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ரூ.600-ம், வாக்குப்பதிவு அலுவலர் 3-க்கு ரூ.1,550-ம், விஏஓ ரூ. 800, அலுவலக உதவியாளர் ரூ.600, வரவேற்பு அலுவலருக்கு ரூ. 800 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு ரூ. 850, வாக்கு எண்ணிக்கை உதவியாளருக்கு ரூ. 650, அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.300 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.