tap oopo - 2026

ஒப்போவின் முதல் டேப்லெட்..! சிறப்புக்கள்..!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் வணிகம்
tap oopo - 2026

ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை வரும் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது

ஒப்போ பேட் என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. மேலும் வெளியான தகவலின்படி இந்த ஒப்போ பேடில் கலர் ஓஎஸ் 12 நிறுவப்பட்டிருக்கும்.

டாக், டெஸ்க்டாப் விட்ஜெட்ஸ், ஷார்ட்கட்ஸ் போன்றவையும் இந்த ஓஎஸ்ஸில் இடம்பெற்றிருக்கும். இந்த டேப் 11 இன்ச் அளவில் 2560×1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வெளியாகவுள்ளது. இதன் டைமென்ஷன் 252x165x6.5mm-ஆக இருக்கும்.

மேலும் இந்த ஒப்போ பேடில் Snapdragon 870 chipset, 6 ஜிபி ரேம், 8360 mAh பேட்டரி, 33W வேகமான சார்ஜிங் ஆகிய வசதியும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.