
வித்வான்கள் நிறைந்திருந்த சபையில் பெரும் வித்வான்களை காட்டிலும் தமக்கு பாண்டித்யம் அதிகம் உண்டு என்பதை சந்தேகமற நிரூபித்துக் காட்டினார் எனது சீடர் என ஜேஷ்ட மகா சன்னிதானம் ஒருமுறை தமது உபன்யாசம் ஒன்றில் குறிப்பிட்டார்
ஆழ்ந்த இலக்கியப் புலமை பெற்று விளங்குகிறார் நம் மகாசன்னிதானம் அவர்கள். இதை பலமுறை நாம் கண்கூடாக காணமுடியும்
இமயம் முதல் குமரி வரை வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான பண்டிதர்களின் மகா சன்னிதானத்தின் வேதம் மற்றும் சாஸ்திர ஞானத்தை மெச்சாதவர் ஒருவரும் இல்லை பண்டிதர்களே பெருமைப்படும் அளவிற்கு அறிவாற்றல் படைத்தவர் இதை பல பண்டிதர்களும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர்.

வேதம் மற்றும் அதன் ஆறு அங்கங்கள் இதர சாஸ்திரங்கள் சங்கரர் முதலான பல சான்றோர்களின் படைப்புகள் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு படைத்த மகாசன்னிதானத்தை பழுத்த மரத்தை நாடி பறவைகள் வருவது போல பண்டிதர்கள் நாடிவந்து தத்தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு போவது சிருங்கேரியிலும் மற்றும் விஜய யாத்திரை முகாங்களிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக ஆகும்
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே மனதில் பதியவைத்துக் கொண்டுவிடும் ஆற்றலை இயல்பாகவே கொண்டுள்ள ஆச்சாரியாள் பண்டிதர்களின் எந்த ஒரு சந்தேகத்தையும் மிக எளிதில் போக்கி விடுகிறார்.
ஒரு முறை பண்டிதர் ஒருவர் மகா சன்னிதானம் வேதத்தின் கனபாடம் வகையைச் சேர்ந்த ஒரு பாடப்பகுதியை எவ்வாறு ஓத வேண்டும் என விளக்கம் கேட்டார் தாம் கனப்பாடப் பயிற்சி பெற்றியிராத போதிலும் பிறர் பயிற்சி செய்வதே செவிவழியாக கேட்ட கேள்வி ஞானத்தை கொண்டு அதற்கேற்ற பகுதியை உரிய முறையில் ஓதிக் காட்டினார்.

மற்றொரு தருணத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து பற்பல கனபாடிகள் ஒரு குழுவாக சிங்கேரி வந்து ஆச்சாரியாரே தரிசனம் செய்தனர் அத்தனை பண்டிதர்களை ஒருசேர கண்டு ஆச்சரியம் கொண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து அவர்களது படிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
அவர்களில் மூத்த வயது உடையவர் நாங்கள் அனைவருமே கனபாடம் முழுவதும் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூற அவர்களுக்கு அவர்களது அறிவாற்றலின் மீதிருந்த நம்பிக்கையை பாராட்டிய ஆச்சாரியாள் அவர்களை கன படத்திலிருந்து ஒரு பகுதியை ஓதுமாறு கூறினார்.
ஆனால் அவர்களோ ஆச்சாரியாளே ஒரு பகுதியை குறிப்பிட்டால் அதை நாங்கள் ஓதுகிறோம் எனக் கூறவே ஆச்சாரியாள் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பெயரை சொல்லி போது அந்த குழுவில் இருந்த ஒருவருக்கு கூட அந்தப் பகுதி நினைவுக்கு வரவே இல்லை.
தோல்வியை ஒப்புக் கொண்டவர்கள் இறுதியில் ஆச்சாரியாள் அந்த பகுதியின் முதல் அடிகளை உரிய ஸ்வரத்துடன் ஓதி காண்பிக்க பிறகு அவர்களால் அப்பகுதியை நினைவிற்குக் கொண்டுவர முடிந்தது அவர்கள் ஓதி முடித்த பின்னர் அவர்களை வெகுவாக பாராட்டி மகாசன்னிதானம் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி கவுரவித்து அனுப்பினார்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிங்கேரி மடத்தில் நடத்தப்படும் கணபதி வாக்கியார்த்த சபையில் கலந்து கொள்ளும் எவருமே ஆச்சாரியாரின் அறிவாற்றலை கண்கூடாக காணக்கூடிய வாய்ப்பினை பெறுவார்கள்
பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்த சபையில் ,கலந்து கொள்வதற்காக நேபாளம் மற்றும் இந்திய நாடெங்கிலும் உள்ள பல பண்டிதர்கள் வருகின்றனர் இந்த பத்து நாட்களில் பண்டிதர் ஒவ்வொருவரும் சாஸ்திர விஷயம் எதையும் எடுத்துக் கொண்டு அதை காலை வேளைகளில் இதர வித்வான்கள் உடன் கூடி ஆராய்ந்து மாலை வேளைகளில் ஆச்சாரியாரின் முன்னிலையில் விவாதங்களில் ஈடுபடுவர்.
சபையில் நடைபெறும் விவாதங்களின்போது வித்வான்கள் கிடையே வெளிப்படையான தகவல் பரிமாற்றங்கள் இருப்பதை ஆச்சாரியாள் விரும்புவதால் எந்த ஒரு வித்வானும் சிறிதும் தயக்கமின்றி தம்முடைய கருத்தை வெளியிட்டு வாதிக்க முடியும் விவாதங்கள் நடைபெறும் சமயம் ஒரு பார்வையாளராக மட்டும் செயல்படும் ஆச்சாரியாள் ஏதேனும் ஒரு விவாதத்தில் ஒருமித்த முடிவு ஏற்படா நிலை உண்டாகும்.
சமயங்களில் தாம் தலையிட்டு தமது தலைசிறந்த பாண்டித்ய ஆற்றலால் அப்படிப்பட்ட விவாதங்களுக்கு உடனடியாக முடிவு கூறிவிடுவார் அம்முடிவு சாஸ்திர ரீதியாக மிகவும் ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால் வித்வான்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.
இம்மாதிரியாக முடிவெடுக்கும் சமயங்களில் ஆச்சாரியாள் பல்வேறு சாஸ்திரங்களில் இருந்தும் சான்றோர்களால் படைக்கப்பட்ட வேதாந்த மற்றும் இலக்கிய நூல்களில் இருந்தும் சர்வ சாதாரணமாக மேற்கோள்காட்டி பேசுகின்ற விதமே அலாதியானது.

சபை நடைபெறும் சமயங்களில் அனைத்து பண்டிதர்களும் அதில் ஈடுபடுகிறார்களா என்று கவனிக்கும் மகா சன்னிதானம் தங்கள் கருத்துக்களை கூற இயலாத எவரேனும் இருந்தார்கள் எனில் அவர்களுக்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருவார்.
ஒருமுறை வித்வத் சபையில் பெருமையை அறிந்து அதில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் இளம் வித்வான் ஒருவர் சிருங்கேரிக்கு வருகை புரிந்தார் சபையில் வந்தமர்ந்த அவர் தம்மை சுற்றிலும் அமர்ந்து இருந்த பெரும் பண்டிதர்களை கண்டதும் மனதில் ஒருவித பயமும் தயக்கமும் ஏற்பட்ட மௌனமாக இருந்து விட்டார்.
இதனை கவனித்து விட்ட மகா சன்னிதானம் தாமே ஒரு சாஸ்திர வாதத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்து அந்த விஷயத்தில் அந்த இளம் வித்வானின் கருத்துக்களை கூறும்படி ஊக்குவித்தார்கள் இப்படி ஜகத்குருவினால் உற்சாகப்படுத்த பட்டதால் அந்த இளம் வித்வானும் தயக்கத்தை விட்டு தனது வாதத்தினை கூறவே ஆச்சாரியாள் அதை சபையில் உள்ள மற்ற பண்டிதர்களுக்கு உரக்கக் கூறி எவரேனும் இதற்கு எதிர்வாதம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டு அந்த இளம் வித்வானிடம் உள்ள பயத்தை முழுவதுமாக நீக்கினார்கள்.
பண்டிதர்களை கௌரவிப்பதில் நம் ஆச்சாரியார் நிகர் அவரே தான் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ விஜயராகவ சாஸ்திரிகள் ஒரு முறை கூறினார்கள் மகாசன்னிதானம் ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் பண்டிதர் ஒருவர் தரிசனத்திற்கு வந்திருந்தார்.
அவரது புலமையை பார்த்து பாராட்டிய மகா சன்னிதானம் அவரிடம் சாஸ்திரிகளே உங்களை மாதிரி பெரிய பண்டிதர்கள் எல்லாம் அவசியம் வித்வத் சபைக்கு வருகை தரவேண்டும் அப்போதுதானே சபையை நடத்துவதன் நோக்கம் நிறைவேறும்.
உங்களைப்போன்ற பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டு தங்களது வாதங்களை வெளியிட்டால் தானே எங்களைப் போன்றவர்கள் மேற்கொண்டு பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
கல்வியில் சரஸ்வதியின் அம்சமாகவே கருதப்படும் மகா சன்னிதானம் இவ்வளவு அடக்கமாக இருந்து ஒரு பண்டிதரிடம் பேசியது ஈடுஇணையற்ற அவரது வினையத்தை காண்பிக்கின்றது.
அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இருப்பதாக கூறுவதற்கு இல்லை உண்மையை கூற வேண்டுமானால் வித்வத் சபையில் கலந்து கொள்ளும் பண்டிதர்கள் தான் ஆச்சாரியாரிளின் அறிவாற்றலை கண்டு வியந்து அந்த ஊற்றிலிருந்து தங்களால் இயன்ற அளவு அள்ளி பருகுகிறார்கள்.
வேதவேதாந்த சாஸ்திர விஷயங்களை விவாதிக்க அவர்களுக்கு மட்டும் இல்லாமல் விவாத விஷயங்களை கேட்பவர்களுக்கும் கூட பெரும் புண்ணியத்தை தருகின்றன என்பது ஆச்சாரியாரின் தீர்மானமாகும்.
ஒரு முறை மதுரையில் வித்வத் சபை நடைபெற்ற சமயம் அங்கே கூடியிருந்த பக்த ஜனங்கள் இடையே பேசுகையில் ஆச்சாரியாள் குறிப்பிட்டதாவது வித்வத் சபை முழுவதும் சமஸ்கிருதத்தில் நடைபெறுகிறது என்றாலும் சமஸ்கிருதம் அறியாதவர்கள் கவலை கொள்ள தேவையில்லை அவர்கள் இங்கு அமர்ந்து பண்டிதர்களால் பேசப்படுவதை செவிமடுக்க அந்த ஸ்ரவணமே அவர்களுக்கு பெரும் புண்ணியத்தை அளித்துவிடும்.
ஆச்சார்யாளின் மேதாவிலாஸத்தினால் அவருடன் தொடர்பு கொள்ளும் அனைவருக்குமே பயன் விளைகிறது என்பதில் ஐயமில்லை மடத்து பாடசாலைகளில் பயிலும் ஆரம்ப நிலை வித்யார்த்திகளில் இருந்து சாஸ்திரங்களை பயிலும் உயர்நிலை வித்யார்த்திகள் வரை அனைவருமே ஆச்சாரியாளின் தெய்வீக அரவணைப்பில் இருந்து வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்தையும் அவ்வப்போது பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
உயர்நிலை வித்யார்த்திகளுக்கு தர்க்கம் முதலான சாஸ்திரங்களை தாமே நேரடியாக கற்பிப்பதை மகாசன்னிதானம் மேற்கொண்டு வருகிறார்கள். படிப்பு முடிந்த வித்யார்திகளை பரீட்சை செய்து அவர்களுக்கு தேர்ச்சியையும் தீர்மானிக்கிறார்கள்.
சிருங்கேரி பாடசாலையில் பயின்று தேசிய மாணவர்கள் இன்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர் வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்கும் அவரது அறிவு ஊற்றினால் பெரும் அனுகூலங்கள் நடைபெறுகின்றது.
ஒரு சமயம் பக்தர் ஒருவர் மகளின் ஜாதகத்தில் ஒரு சில விவரங்கள் கேட்க வந்தார் பல ஜோதிடர்கள் மாறுபட்ட கருத்துக்களை உண்டாக்கும் வண்ணம் இருந்ததால் ஆச்சாரியாரின் உதவியை நாடினார் பூரண ஜோதிட சாஸ்திர ஞானம் உடையவரான மகா சன்னிதானம் அந்த விவரங்களை கணப்பொழுதில் அலசி ஆராய்ந்து பக்தருக்கு தெளிவானதொரு முடிவை கொடுத்தருளினார்கள்.
பத்திரிகையாளர் ஒருவருக்கு உபநிஷத்துக்கள் இடையே ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தோன்றும் வகையில் பற்பல கருத்துக்கள் உள்ளன என சந்தேகம் தோன்றியது.
ஆச்சாரியார் அதனை தீர்ப்பதில் வல்லவர் என்ற நம்பிக்கையுடன் அவர் ஜகத்குருவை அணுகி தமது சந்தேகத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டார் அவரது நம்பிக்கை வீண்போகவில்லை எப்படிப்பட்ட வகையில் அத்தகைய கருத்துக்களை அணுகவேண்டும் என்பதை தெளிவாக அவருக்கு எடுத்துரைத்து அவரது சந்தேகத்தை தீர்த்து அருளினார்கள் மகாசந்நிதானம்.
மந்திர ஜப விதி முறைகளில் பெருத்த சந்தேகங்கள் வரப்பெற்ற ஒரு பக்தர் ஜகத்குருவை அணுகி அவரது ஆலோசனையை வேண்டவே மந்திர சாஸ்திரத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றவரான மகா சன்னிதானம் அவரது சந்தேகங்களுக்கு பொருத்தமான விளக்கங்கள் கூறி மந்திர ஜபத்தை விட்டுவிடாது செய்யும்படி அவருக்கு உபதேசித்து அருளினார்கள்.
புது தில்லியில் ஒரு முறை விஜய யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம் தொழில்துறை வல்லுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் சாஸ்திரங்களும் நிர்வாகமும் என்ற தலைப்பில் உரையாற்றிய ஜகத்குரு பழம்பெரும் சாத்திரங்களில் தொழில் மற்றும் தொழிலாளர் நிர்வாக மேன்மைக்கு உதவும் வகையில் எத்தகைய உயர்ந்த சிறப்பான வழிமுறைகள் காட்டப் பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்தார்கள் .
சாஸ்த்திரங்களில் காட்டப்பட்டுள்ள கருத்துகளை ஒப்புயர்வற்ற அறிவாற்றல் கொண்டு ஒருங்கிணைத்து இன்றைய நிலைக்கும் பொருந்துமாறு எடுத்துக்கூறிய ஆச்சாரியாரிளின் அறிவாற்றலை விளக்கிக் கூற இயலாது.
சுயநலம் நாடாமல் பிறர் நலனுக்காக தமது அபார அறிவாற்றலை பயன்படுத்தி வரும் மகா சன்னிதானம் அவர்களின் பெருமைக்கு மணி மகுடமாக விளங்குவது அவரது அடக்கம் என்பது அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.
வித்யா கர்வம் என்பது பொதுவாக பண்டிதர்களுக்கு உண்டாகும் ஆனால் மகா சன்னிதானம் இதற்கு விதிவிலக்காகவே திகழ்கிறார் பிரசித்தி பெற்ற ஆன்மிக பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பெரும் சர்ச்சைகளுக்கு உட்பட்ட கேள்விகள் பலவற்றுடன் ஆச்சாரியார் அணுகியபோது மிக சிறப்பான முறையில் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் மகாசன்னிதானம்.
ஆச்சாரியாளை வானளாவ புகழ்ந்த அந்த பத்திரிகையாளர் ஆச்சாரியாரிளின் அறிவு ஈடு இணையற்றது என்று கூறினார்கள்
அதற்கு ஆச்சாரியாள் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நீங்கள் எப்போது வேண்டுமானால் வேண்டுமென்றாலும் வரலாம் சந்தேகங்களுக்கு உரிய பதில் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால் அவசியம் உங்களுக்கு கூறுவேன்.
இந்த மாதிரி விஷயத்தில் சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது நமக்கு எல்லாம் தெரியும் என்பது கர்வம் நமக்கு என்று வருகிறதோ அன்று இருந்த நமக்கு ஒன்றும் தெரியாமல் போய்விடும் . கடவுள் அப்படி செய்து விடுவார் என்று கூறுகிறார்கள்.