கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் “இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.
உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுக்கும் நோக்கத்தில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம்,வரவணை கிராமம்,வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுக்கும் முறைகளைக் கடைபிடித்து வருகிறது.
1.முதலில் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
2.இயற்கை மூலிகை கசாயம் கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
3.கொரோனா விடுமுறையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நேரத்தை பயனுள்ளதாக அமையும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
5.கொரோனா வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவர “இயற்கை மூலிகை கசாயம் “விநியோகம் செய்யப்பட்டது. வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான இல.மணிகண்டன்,செயலாளர் ரா.அர்ஜுன்,பொருளாளர் அ.ஐய்யப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். தன்னார்வலர் ரா.வெங்கடாசலம், ஆ.பாலமுருகன், ப.பெரியசாமி ராம்கி அங்கன்வாடி பணியாளர், வெ.தாமரைச்செல்வி ஆகியோர் மூலம் “இயற்கை மூலிகை கசாயம் “விநியோகம் செய்யப்பட்டது.