
நடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை சமந்தா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதையடுத்து அட்லீ இயக்கத் தில் ஷாருக்கான் ஜோடியாக, இந்தி படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதன் ஷூட்டிங், புனே அருகே சமீபத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தரிசனத்திற்கு பின் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் கோயில் நிர்வாகிகளும் ரசிகர்களும் அவர்களுடன் புகைப் படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.