ஐபிஎல்: தோல்வியால்… 6ம் இடத்தில் ராஜஸ்தான்!

விளையாட்டு
ipl2021
ipl2021

ஐ.பி.எல் 2021
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ்


– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி மட்டையாட முடிவு செய்தது. அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் முதல் ஓவரிலேயெ நடையைக் கட்டினார். அப்போது விளையாட வந்த சஞ்சு சாம்சன் 18 ஓவர்கள் விளையாடி 57 பந்துகளில் 82 ரன் எடுத்து இருபதாவது ஓவரில் அவுட்டானார்.

அவருக்குத் துணையாக ஜெய்ஸ்வால் (35) மஹிபால் லோமர் (29) (ராஜஸ்தானில் பிறந்த இந்திய வீரர்) இருந்தனர். இருபது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜஸ்தான் அணியின் துரதிருஷ்டம் கடந்த ஒன்பது ஆட்டங்களில் எட்டு முறை தோற்ற சன்ரைசர்ஸ் அணி, தொடக்க ஆட்டக்காரரான வார்னர் ஆடாத அணி 18.3 ஓவர்களில் 167 ரன் கள் எடுத்து அபாரமாக வெற்றிபெற்றது.

இன்று புதிதாக விளையாட வந்த ஜேசன் ராய் (60), அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் (51), அபிஷேக் ஷர்மா (21) ஆகியோர் சிறப்பாக ஆடி அனியை வெற்றி பெறவைத்தனர். ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் அது அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட சன்ரைசர்ஸ் அணி இனியுள்ள ஆடங்களில் பிற அனிகளின் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும் நிலையில் உள்ளது. சஞ்சு சாம்சன் இதுவரை 433 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த பேட்ஸ்மனாகிறார்.

சிறந்த விக்கட் கீப்பர் வரிசையில் இரண்டாமிடம் வகிக்கிறார். கொல்கொத்தா அணிக்கும் டெல்லி அணிக்குமிடையே ஷார்ஜாவில் ஆட்டம் நடைபெறும்.

புள்ளிப்பட்டியல்

அணி M W L PT NRR
சென்னை 10 8 2 16 1.069
டெல்லி 10 8 2 16 0.711
பெங்களூர் 10 6 4 12 -0.359
கொல்கொத்தா 10 4 6 8 0.322
பஞ்சாப் 10 4 6 8 -0.271
ராஜஸ்தான் 10 4 6 8 -0.369
மும்பை 10 4 6 8 -0.551
சன்ரைசர்ஸ் 10 2 8 4 -0.501

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.