October 15, 2024, 5:43 AM
25.4 C
Chennai

தி காஷ்மீர் ஃபைல்

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ’தி காஷ்மீர் ஃபைல்’ பார்க்க இன்று திரையரங்கிற்குச் சென்றேன். படத்தைப் பற்றிச் சொல்லும் முன் இன்று பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள்.

சுமார் 700 வருடங்களுக்கு முன் இதே நாளில் பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் உலூக்கான் தலைமையில் முகம்மதியர்கள் ஊருக்குள் நுழைந்து, கூடியிருந்த அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்தில் 12,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை(genocide) “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

இதைக் குறித்து 2005ல் சுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதுமில் இப்படி எழுதியிருந்தார்.

”அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான ‘கோயில் ஒழுகு’ புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன் … ‘கோயில் ஒழுகு’ நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட்டிருக்கிறார்.நிச்சயம் இருக்கலாம். நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல!

முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.
யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்”

ALSO READ:  ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

என்று குறிப்பிட உடனே சுஜாதா என்ற ‘ஐயங்கார்’ என்று இதை ஒரு பெரும் விவாதமாக இலக்கியச் சிறுபத்திரிக்கைகளும், திராவிட ’ஸ்டாக்’ பிளாகர்களும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தார்கள். நடிகைக்கு நடுவில் மழுப்பல் மறுப்பு பெட்டிச் செய்திகளை போட்டுக் கடந்து சென்றார்கள். இதைப் போன்ற உண்மையான வரலாற்றை நம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று விழிப்புடன் இருக்கிறார்கள்.

இதே போல், அசோகமித்திரன் அவுட்லூக் பத்திரிக்கையில் We Are Like The Jews (Politics apart, Brahmin-bashing is rampant in literary and cultural worlds too) என்று பிராமணர்களின் நிலைப் பற்றி [”Over the years, it has been fed into their psyche that they are different from the Dravidians. The Dravidian movement always called them vandherigal (immigrants/ outsiders)…There’s an undercurrent of anti-brahminism in everyday life.] எழுதியபோது அசோகமித்திரன் மீது கடுமையான தாக்குதல் நடந்தது.

தமிழ் நாட்டில் நடந்த வரலாறு, நடந்துகொண்டு இருக்கும் வரலாறு பற்றி சின்ன குறிப்பு எழுதினாலே இந்த நிலைமை. அப்படி இருக்க காஷ்மீர் பற்றி எல்லாம் நம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்குச் சினிமா பாடல் காட்சிகளும், ’எப்பவும் அங்கே தீவிரவாத சண்டை, தனிநாடு, சுதந்திரம், என்ற பிரிவினை வாதம்’ போன்ற நாளிதழ்களும் செய்திகளின் மூலமே நமக்குத் தெரிந்த காஷ்மீருக்குள் ”வாங்க காஷ்மீர் உள்ளே சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்” என்று நம்மை மூன்று மணி நேரம் உள்ளே அழைத்துச் செல்கிறது இந்தப் படம்.

ALSO READ:  திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்டு 40 மாணவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் அனுமதி!

படத்தின் ஆரம்பமே இந்தப் படம் எப்படிப் பட்ட கான்வாஸ் கொண்டு தீட்டப்பட்டுள்ளது என்று நமக்கு உணர்த்திவிடுகிறது. வரும் காட்சிகளும், இசையும் ஒரு விதச் சந்தியாகால இருட்டு மூடில் பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான பயத்தையும் பதட்டத்தையும் ஆரம்பம் முதல் கடைசிவரை நம்மிடம் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. ( ஒரு சமயத்தில் துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு போதுமடா சாமி எப்போது வெளியே வருவோம் என்று ஆகிவிடுகிறது )

ஆரம்ப காட்சியில் காட்டப்படும் கைக் குழந்தை(கிருஷ்ணன்) கல்லூரி மாணவனாக காஷ்மீர் பற்றிய புரிதல் இல்லாமல், தன் தாத்தாவின் அஸ்தியைத் தங்கள் சொந்த வீட்டில் தூவ வரும் போது அங்கே தன் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்ற வரலாற்றைத் தெரிந்துகொள்கிறான். இதை உண்மைக்கு மிக அருகில், கொடூரமான உண்மைக்கு மிக அருகில் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தக் குழந்தை கிருஷ்ணன் வேறு யாரும் இல்லை, படம் பார்க்கும் நாம் தான் என்பது சற்று நேரத்தில் நமக்குப் புரிந்துவிடுகிறது. புரியும் போது வருத்தமும், கையாலாகாத்தனமும் நமக்கு நம் மீதே எரிச்சல் அடையச் செய்கிறது.

படத்தின் திரைக்கதை சற்று மெதுவாக அங்கும் இங்கும் காட்சிகளைக் காண்பித்து நம்மை அழைத்துச் செல்கிறது. இதை வேகமாக எடிட் செய்திருக்கலாம் ஆனால் அப்படிச் செய்தால் சினிமாத்தனம் எட்டிப் பார்த்திருக்கும் என்பது என் எண்ணம்.

ALSO READ:  திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! பீதியைக் கிளப்பி.. வானில் வட்டமடித்து.. பத்திரமாகத் தரையிறக்கம்!

நம் நாட்டில் மாஸ் மீடியா, கம்யூனிஸ்ட், மற்றும் காங்கிரஸ் கட்சி தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு எப்படி காஷ்மீரைக் காவு வாங்கியிருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

அவர்களுக்கு வேண்டிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஸ்கர் லெவர்லுகு உயர்த்திய தமிழ் நாட்டு பிரபலங்கள் இந்தப் படத்தைக் குறித்து மௌனமாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மக்கள் இந்தப் படத்துக்கு ஆதரவு கொடுப்பது அவர்களுக்குக் கவலையும், பதட்டத்தையும் கொடுத்திருக்கிறது.

கடைசியில் கிருஷ்ணா காஷ்மீர் பற்றிப் பேசும் அந்தக் காட்சியும் வசனமும், நம் காலத்திலேயே நம் வரலாற்றை நம் செக்யூலர் அரசியல் தலைவர்கள் நம்மிடமிருந்து எப்படி மறைத்திருக்கிறார்கள், எப்பேர்ப்பட்ட காஷ்மீரை நாம் இழந்திருக்கிறோம் என்று புரியும் போது வருத்தமும், ஏமாற்றமும், எரிச்சலும் வருகிறது.

படத்தில் ஓர் இடத்தில் ஹோம் மினிஸ்டர் அகதிகளைப் பார்வையிட வருவார். அப்போது அனுபம் கெர் கூட்டத்திலிருந்து ‘Remove Article 370’ என்ற பலகையுடன் வரும் காட்சிக்குத் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். இது படத்துக்கும், மோடிக்கும் கிடைத்த கைத்தட்டல்.

நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

  • சுஜாதா தேசிகன்
author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.15- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால்,