viruthagriswarar - 2026

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கோபுரத்தில் 3 கலசங்கள் திருட்டு!

சற்றுமுன் கிரைம் நியூஸ் தமிழகம்
viruthagriswarar - 2026

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளது.

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுமார் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று.

இந்தக் கோயிலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.