dog - 2026

யூகியும் மேப்பிள்ளும் அடிக்கும் லூட்டி! பார்க்க பியூட்டி!

அடடே... அப்படியா? உலகம்
dog - 2026

சமோய்ட் மற்றும் ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் நாய்களான யூகி மற்றும் மேப்பிள் ஆகியவற்றின் வீடியோ ஒன்று சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 37,000 பின்தொடர்பவர்களை கொண்ட கேனைன் ஜோடி, தற்போது டிக்டாக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில், யூகி நாய்க்குட்டியானது மேப்பிள் நாய்க்குட்டியை இழுத்து, பாசமாக கட்டிப்பிடிக்கிறது. இந்த வீடியோ இதுவரை 6.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதனையடுத்து மற்றொரு வீடியோவில், யூகி மற்றொரு சிறிய நாய்க்குட்டியான அதன் தங்கையை எப்படி வரவேற்கிறது என்பதை காண்பிக்கிறது.

இருப்பினும் இரண்டு நாய்களும் ஒன்றையொன்று கட்டி தழுவும் வீடியோ தான் அதிகமானோரை ஈர்த்து இருக்கிறது. அந்த வீடியோவுடன் ‘இது மிகவும் மதிப்பு வாய்ந்தது’ என்கிற கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ நாய் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஒரு புதிய நாயின் அறிமுகமானது பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்டர்னரி பிஹேவியர்ஸ்டுகளின் அறிக்கையின்படி, இந்த புதிய நாய் வருகையின்போது ஏற்படும் மாற்றமானது பழைய நாய்க்கு சில நன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமையலாம் என்று கூறுகிறது.

புதிய நாயின் நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பழைய நாய்க்கு பயனை அளிக்கிறது. அதிக பயத்தை கொண்டுள்ள நாய்கள், அவற்றுடன் துணைக்கு ஒரு நாய் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பானதாக உணர்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.