தொடரும் வெடிகுண்டு பீதி! ‘சந்தேக’ பைக் ஒன்றின் பெட்டி குண்டுவைத்துத் திறப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

colomboo scooter blast find - 2026

இலங்கை கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகே பைக்கில் வெடி குண்டு வைக்கப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பெட்டி சிறிய ரக குண்டு வைத்து திறக்கப் பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தத்தில் அங்கிருந்தோர் பலர் அலறியுள்ளனர்.

கொழும்பு வெள்ளவெத்தை சவோய் திரையரங்குக்கு அருகே  பூட்டிய வீட்டின் முன்பு கேட்பார் அற்று, சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப் பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன பெட்டியை திறக்க முடியாமல் திணறிய போலீசார், பெட்டியில் இருப்பது என்ன என்பது தெரியாததால், வேறு வழியின்றி சிறிய ரக வெடியை வைத்து வெடிக்கச் செய்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் திடீர் வெடிச்சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் அலறினர். இருப்பினும், அந்த பைக்கில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப் படவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து, போலீஸார் சற்று நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.