IMG 20220308 WA0060 - 2026

மணப்பாறை அருகே மாமன்னர்கள் பொான்னர்,சங்கர் மாசி பெருந்திருவிழா

சற்றுமுன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெல்லிவளநாட்டில்
மாமன்னர்கள் பொான்னர்,சங்கர் மாசி பெருந்திருவிழா மற்றும் தங்கை அரிக்காணி தங்காளுக்காக கிளி வேட்டை நடத்திய வரலாற்று நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்

IMG 20220308 WA0060 - 2026
IMG 20220308 WA0059 - 2026

மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா – தங்கை அரிக்காணி என்னும் நல்லதங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வு மிக பிரபலமான சமூக நிகழ்வாகும்.

கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர்- சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பொன்னர்-சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில் இன்று நடைபெற்றது. பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியை தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியை கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது.நிகழ்வை திருச்சி மதுரை தஞ்சாவூர் பகுதி மக்கள் லட்சக்கணக்கில் பார்த்து பரவசம் அடைந்தனர்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.