December 6, 2025, 8:55 PM
26.8 C
Chennai

கருணை அற்ற கொலை இல்லம்: தேவனின் பெயரில் ஒளிந்திருக்கும் பணத்தாசை சாத்தான்கள்!

சென்னை:

பணத்தாசை புகுந்துவிட்டால், தேவன் பெயரில் சாத்தான் ஆட்சி நடத்தும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது ஒரு கருணை இல்லம் என்ற பெயரில் இயங்கும் ஈவிரக்கமற்ற கொலை இல்லம். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் இயங்கும் ஒரு கிறிஸ்துவ பின்னணியில் இயங்கும் இல்லம்தான் புகாருக்கு உள்ளாகியுள்ளது. கருணை இல்லத்தில் மர்மமான முறையில் 1000 பேர் புதைக்கப் பட்டிருப்பதாகவும், இறந்தவர்கள் விவரம் கிடைக்காததால் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப் படுகிறது.

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றர்களுக்கான கருணை இல்லம் என்ற பெயரில் ஒரு இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கு மர்மமான முறையில் அடுத்தடுத்து இரு முதியவர்கள் இறந்ததால், தன்னை அந்த இல்லத்தை விட்டு வெளியே விடுமாறு அன்னம்மாள் என்ற மூதாட்டி கூறியுள்ளார். ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வேனில் காய்கறி மூட்டைகளுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடலும் இந்தக் கருணை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இரும்புலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த அன்னம்மாளை (74) வலுக்கட்டாயமாக அதே வேனில் பிணத்துடன் அழைத்து வந்துள்ளனர்.

பிணத்துடன் தன்னை வேனில் கொண்டு சென்றதை அடுத்து அன்னம்மாள் கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சாலையில் வந்த வேனைக் கடந்து வெளியில் கேட்டது. சேலையூர்அருகே வேன் வந்தபோது, சந்தேகப் பட்ட பொதுமக்கள் அந்த வேனை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேனுக்குள் பிணம், மூதாட்டி மற்றும் காய்கறி மூட்டைகள் என இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போஸீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் வந்து சோதனையிட்டு வேனை பறிமுதல் செய்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தந்தனர். போலீஸாரிடம், பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை மட்டும் தனியாகப் பிரித்து வெளிநாட்டில் விற்பதாக குற்றம் சாட்டினர்.

இதை அடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜி உள்பட உத்தரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட வருவாய், சுகாதாரம், காவல், உளவு உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. கருணை இல்லத்தின் அனுமதி கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதும், ஒவ்வொரு மாதமும் சுமார் 40 முதல் 50 முதியோர் மர்மமான முறையில் இறப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

தங்களை வலுக்கட்டாயமாக அந்த இல்லத்தில் தங்க வைத்துள்ளதாகவும், சரியான உணவு, மருத்துவ வசதி எதுவும் வழங்காமல் வைத்திருப்பதாக அந்த இல்லத்தில் இருந்த முதியவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 முதியோர்கள் இறந்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றிய முறையான விவரங்கள் எதுவும் கருணை இல்ல நிர்வாகிகளிடம் இல்லை. கருணை இல்லத்தின் பின்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய பிணவறை உள்ளது. 140 கான்கிரீட் அடுக்குகள் கொண்ட சிறு சிறு அறைகள் உள்ளது, அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுவரில் இருக்கும் சிறுசிறு பெட்டி போன்ற அறைகளில் இறந்தவர்களின் உடல்களை சிமெண்டு போட்டு மூடி விடுகின்றனர் என்று புகார் கூறினர் அங்குள்ளவர்கள்.

paleshwaram annammal karunai illam2 - 2025

மர்மமான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுவதால் அதில் இருந்து எஞ்சும் எலும்புகள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். இறந்தவர்கள் குறித்த முறையான விவரம் இல்லாததால் இதுபற்றிய முழுமையான தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே எத்தனை பேர் இறந்தனர்? எவ்வாறு உடல் அடக்கம் செய்யப்பட்டது? உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

இதனிடையே அதிகாரிகளிடம் மல்லுக்கு நின்ற இல்ல நிர்வாகி தாமஸ், அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசினார். இன்ஸ்பெக்டர் எதுக்கு இருக்காங்க, அதிகாரிகள் எதுக்கு இருக்காங்க, சந்தேகம் வெச்சிக்கிட்டு ஒரு ஆளைப் பத்தி தவறா சொல்லக் கூடாது. வந்து என்கொய்ரி பண்ணட்டுமே. கடப்பாரையைக் கொண்டாந்து இடிச்சி பாக்கட்டுமே. அத்தனை ஹோல்ஸ் இருக்கான்னு. எலும்புக்கூடு இருக்கான்னு பாக்கட்டுமே.

நாளைக்கே நிப்பாட்டச் சொல்லுங்க. இதை நிப்பாட்டறேன் மீதம் இருக்கிற 325 பேர நீங்களே வேணும்னா கவனிச்சிங்கன்னு அதிகாரிகள் கிட்ட சொல்லிட்டேன். ஆனா நாளைக்கே இந்த 325 பேரையும் நிப்பாட்டினா, மீதம் இருக்கற 4 ஹாஸ்பிஸ்ஸையும் நோட்டீஸ் கொடுத்து நான் நிப்பாட்டிருவேன் கவர்மெண்டுக்கு… என்று திமிர்த்தனமாகக் கூறுகிறார் தாமஸ்.

கடந்த 2015ல் இது போல் இந்த இல்லத்தின் மீது புகார் கூறப்பட்டது. ஆனால், இந்த இல்லத்தின் மீது விசாரணையோ நடவடிக்கையோ எடுக்காமல், புகாரைக் கூறிய சுகாதாரத் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் பேரிலும், அரசுத் துறையின் பேரிலும் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.


இப்போதும் கூட, பொதுமக்களின் புகார் பலமாகவே, கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், வழக்கம் போல் துறை அதிகாரிகளை மாற்றிவிட்டு, இல்லத்தை வழக்கம் போல் செயல்பட விடப் போகிறதா காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சிறுபான்மையினர் என்ற பெயரில் கிறிஸ்துவத்தின் பெயரில் இயங்கும் சேவை அமைப்புகள் பலவும் அரசின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ்கள் என்ற போர்வையில் சமூக விரோதச் செயல்களில் சிலர் ஈடுபடுவதாக புகார்கள் வருவதால், அவைகள் களையெடுக்கப் பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

2 COMMENTS

  1. Karunai Illathil Karunaye Illadha Seyalgal kurithu Manam Padharugiradhu. Kaval Kappor Thangal Kadamaigalai sarivara Seyya Vendiyadhu Migaum Awasyam. Dhayavu Seidhu Avargal Lancham Ennum kodumayana Pidiyil Sikkim Kollamal, makkalai Kappadhil urudhiyaga iruthal Awasyam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories