ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’, ‘2.ஓ’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கும் ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



