rose chatni - 2026

இப்படி ஒரு சட்னியா? ரோஜப்பூச் சட்னி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
rose chatni - 2026

ரோஜாப்பூச் சட்னி

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 20
புளி – சிறிய எலுமிச்சை அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து இறக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து அதே சூட்டில் வறுக்கவும். இதை ஆறவைத்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் கலந்து பரிமாறவும். சட்னி ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.