images 66 - 2026

புதுப்பொலிவு பெறும் சேப்பாக்கம் மைதானம்-

சற்றுமுன்

ரூ.139 கோடியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கிடைக்க உள்ளது.
நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் செய்யக்கூடாது; மரங்களை வெட்ட அனுமதியில்லை; அருகில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

images 66 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.