images 72 - 2026

மார்ச் 22இல் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா..

சற்றுமுன்

பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மார்ச் 22இல் நடைபெறும் .

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.

சுமார் 2 வருடங்களுக்கு பிறகு குண்டம் விழா நடப்பதால் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 22-ந் தேதி குண்டம் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து குண்டம் இறங்குகிறார்கள். 

குண்டம் நாளான வரும் 22-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் 26&ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது. விடுமுறை நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவூலம், சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியா ளர்களுடன் செயல்படும்.

என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

images 72 - 2026
images 73 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.