பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினி சந்திப்பு!

Published:

பார்த்திபன் மகள் திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்-சீதா தம்பதியின் இளைய மகள் கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் நேற்று நடந்தது.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் என்பதால் இருவரும் வேறுபாடுகாட்டாமல் ஒன்றாக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

222 - 2026

மணமக்களை வாழ்த்துவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்த போது, ரஜினிகாந்தும் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.இதுபோல் வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர். அரசியலில் வேறுபாடு இருந்தாலும் பொது இடத்தில் பண்புடன் நடந்து கொண்டனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img