சென்னை:
ஈவேரா., பெரியார் குறித்து சர்ச்சைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்து தீனி போடுகிறார் பாஜக., தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, வருங்காலத்தில் பெரியார் சிலையும் இடிக்கப் படும் என்று ஒரு கருத்தைத் தெரிவித்து பின் அதனை தன் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சுப்பிரமணிய சுவாமி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
‘பெரியார்’ நாயக்கர் சிலை உடைக்கப்பட்டது குறித்து நாம் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, 15/08/47 (சுதந்திர தினத்தில்) பிரிட்டிஷ் கவர்னரை சென்று சந்தித்து, பிரிட்டிஷார் தமிழகத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதை நாம் மறந்து விட முடியாது…
While we all opposed demolishing “Periyar”Naicker statue, remember he on 15/8/47 met British Governor and urged British to stay on in TN!
— Subramanian Swamy (@Swamy39) March 9, 2018
மேலும் ஜின்னா பிரிட்டிஷாருடன் (பாகிஸ்தான் குறித்து) பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, தனி திராவிடஸ்தான் கோரிக்கையையும் தனது பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ளுமாறு நாயக்கர் கடிதம் எழுதினார். ஆனால், ஜின்னா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை… – என்று கருத்து தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
Naicker also wrote to Jinnah urging him to include separate “Dravidastan” in Jinnah’s talks with British. Jinnah rebuffed taking it up .
— Subramanian Swamy (@Swamy39) March 9, 2018