health tips - 2026

அப்பாச்சி தீர்வு: முடி உதிர்வு, வெண்குஷ்டம், குழந்தை வளர்ச்சி, சிறுநீர் எரிச்சல், க்ஷயரோகம், மலட்டுத்தன்மை..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

முடி உதிர்வதைத் தடுக்க…

தினமும் நெல்லிக்காய்ப்பொடி அதிகம் சேர்க்கப்பட்ட திரிபலா லேகியத்தை சாப்பிட்டு வர முடி உதிர்வது நின்று நன்கு வளரத் தொடங்கும்.

குழந்தை நன்கு வளர…

கீழாநெல்லி இலையை அரைத்து ஒரு சுண்டைக்காயளவு பாலோடு சேர்த்து கொடுத்து வர நோய்கள் நீங்கி குழந்தை திடகாத்திரமாய் வளரும்.

வெண் குஷ்டத்திற்கு…

சங்கு பூக்களுடன் அதன் வேரையும் நன்றாக அரைத்து வெண் குஷ்டம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வர நல்ல குணம் தெரியும்.

எலுமிச்சை மருத்துவம், கல்யாணமுருங்கை மருத்துவம்

சிறிது எலுமிச்சை சாறுடன் தக்காளி சாறும் தேனும் கலந்து காலை. மாலை ஓர் அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரல் சீர்கேடு குணமாகும். சிறுநீரிலுள்ள சர்க்கரைப் பொருளும் குறைந்து விடும். க்ஷயரோக இருமல் கூட குணமாகும்.

கல்யாண முருங்கையின் இலைச்சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாக நீர் இறங்கச் செய்யும். பெண்கள் தினமும் காலை, மாலை ஓர் அவுன்ஸ் சாறு குடித்து வர மலட்டுத் தன்மை மாறும்.

நீண்டகால நீர்ச்சுருக்கு. நீர் எரிச்சல் வியாதிகள் உள்ளவர்கள் பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.

இணைப்புத் தசைகளில் வலியா?

குப்பைமேனி இலைச் சாறும் ஆமணக்கு எண்ணெயும் சமமாக கலந்து நீர் சுண்டக் காய்ச்சி கை, கால், இடுப்பு. புஜம் போன்ற இணைப்புத் தசை களில் ஏற்படும் வாத வலிகளுக்குப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.