madurai azhagar vaigai river - 2026

பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; மதுரை விழாக்கோலம்!

மதுரை
madurai azhagar vaigai river - 2026

மதுரை வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்: பல லட்சம் பக்தர்கள் பக்தி பரவசம். தடையை மீறி ஆற்றில் இறங்கிய பக்தர்கள்!

மதுரை: மதுரையில், சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். இதை ,பல லட்சம் கண்டு தரிசித்தனர். கள்ளழகர் நேற்று தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது.

இதையொட்டி ,இன்று அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மழையின் காரணமாக வைகையாற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், பக்தர்கள் யாரையும் வைகை ஆற்றில் இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

ஆனால், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஆற்றில் இறங்குவதை தடுக்க முடியவில்லையாம். ஆற்றில் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசம் கோஷமிட்டனர். ஏராளமான பக்தர்கள் வைகை நதிக்கரையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.